Thursday, November 20, 2014

குட்டி குருவி

Tamil version of chiyyo chiyyo gubbi naanu

குட்டி குருவி
குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
நெல்லி மரமே நெல்லி மரமே மேகம் கருக்குது
குட்டி குருவி கூடு கட்ட இடத்தை நீ குடு
இடமே இல்ல இடமே இல்ல குட்டி குருவியே
கூடு கட்ட என் கிளையில் இடமே இல்லையே

குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
பலா மரமே பலா மரமே மேகம் கருக்குது
குட்டி குருவி கூடு கட்ட இடத்தை நீ குடு
இடமே இல்ல இடமே இல்ல குட்டி குருவியே
கூடு கட்ட என் கிளையில் இடமே இல்லையே

குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
தேக்கு மரமே தேக்கு மரமே மேகம் கருக்குது
குட்டி குருவி கூடு கட்ட இடத்தை நீ குடு
இடமே இல்ல இடமே இல்ல குட்டி குருவியே
கூடு கட்ட என் கிளையில் இடமே இல்லையே

குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
குட்டி குட்டி குருவி நான் குட்டி குருவி நான்
வாழை மரமே வாழை மரமே மேகம் கருக்குது
குட்டி குருவி கூடு கட்ட இடத்தை நீ குடு
இடமிருக்கு இடமிருக்கு குட்டி குருவியே
மழையோ வெயிலோ இடமிருக்கு குட்டி குருவியே

சூறை காற்றும் இடியும் மழையும் சேர்ந்து வந்தது
ஐயோ பாவம் நெல்லி மரம் நிலத்தில் விழுந்தது
சூறை காற்றும் இடியும் மழையும் சேர்ந்து வந்தது
ஐயோ பாவம் பலா மரம் நிலத்தில் விழுந்தது
சூறை காற்றும் இடியும் மழையும் சேர்ந்து வந்தது
ஐயோ பாவம் தேக்கு மரம் நிலத்தில் விழுந்தது

காற்றும் போச்சு இடியும் போச்சு மழையும் போச்சு 
கருணை உள்ள வாழை மரந்தான் துளிர் விட்டுச்சு

தமிழாக்கம்: மாறன் 

No comments:

Post a Comment